உள்ளூர் செய்திகள்
மதுரவாயல் பைபாஸ் சாலையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் மரணம்
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார்.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போரூர்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது22). மினி வேன் டிரைவர். இவர் நேற்று இரவு வேனில் மரசாமான்கள் ஏற்றிக் கொண்டு புழல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மதுரவாயல் அருகே வந்தபோது வேனை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மினி வேன் டிரைவர் சந்துருவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.