உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வீரர்களுக்கு போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி வெற்றி

Published On 2022-07-11 12:23 IST   |   Update On 2022-07-11 12:23:00 IST
  • கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், நீச்சல் மற்றும் துறை ரீதியான போட்டிகள் நடைபெற்றன.
  • வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவண குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

திருவள்ளூர்:

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடை பெற்றது.

இதில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், நீச்சல் மற்றும் துறை ரீதியான போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையிலான திருவள்ளூர் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவண குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வடமேற்கு மண்டலத்தைச் சார்ந்த தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்கள் உதவி மாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News