உள்ளூர் செய்திகள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு: உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2022-06-19 15:17 IST   |   Update On 2022-06-19 15:17:00 IST
  • நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
  • சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்கச் செல்வது வழக்கம்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டு செல்கி ன்றனர்.

விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்கச் செல்வது வழக்கம்.

நேற்று இரவு திடீரென திருமூர்த்திமலை பகுதியில் கனமழை கொட்டியதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வந்தனர். ஆனால் தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News