பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: சீறிப்பாயும் 1000 காளைகள்...
- ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் களம் இறங்கி மாடுகளை பிடிப்பார்கள்.
- மொத்தம் 1000 மாடுகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.
இதில் வி.கே. சசிகலா காளைக்கு சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. வீரர்கள் உறுதி மொழி ஏற்று மாடுகளை பிடிக்ச் சென்றர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர்.
வீரர்கள் அதிகாலை முதல் போட்டி நடைபெறும் இடத்தில் குவிந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகே வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ பரிசோதனைக்கு வீரர்கள் முண்டியடித்து சென்றதால் தடுப்புகள் கீழே விழுந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
மருத்துவம பரிசோதனைக்குப் பிறகு வீரர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அதிக மாடுகள் பிடிக்கப்பட்ட வீரர் இறுதிச் சுற்றுக்கு அனுமதிக்கப்படுவார். இறுதிச் சுற்று முடிவில் அதிக காளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்.
அதேபோல் காளைகளை உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் பாலமேடுக்கு அழைத்து வந்தனர். காளைக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு, அதன்பின் டோக்கன் வழங்கப்படும். டோக்கன் அடிப்படையில் காளைகள் அவிழ்த்துவிடப்படும்.