பூந்தமல்லி அருகே திருநங்கை அடித்துக்கொலை
- திருநங்கை யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அருகே வயலாநல்லூர் கிராமத்தில் குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் குளக்கரை வழியாக சென்ற போது துர்நாற்றம் வீசியது. அங்கு திருநங்கை ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
திருநங்கை யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரது முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.
மர்ம நபர்கள் அவரை அடித்துகொலை செய்து விட்டு உடலை குளத்தில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.திருநங்கையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
கொலையுண்ட திருநங்கையை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.