உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி
- மோட்டார் சைக்கிளில் சென்ற சுரேஷ், இதில் நிலை தடுமாறி கார் மீது மோதினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று பணிமுடித்து புதுத் துணிகளை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
இவர் செங்குறிச்சி சாலை யில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற கார் பெட்ரோல் பங்கிற்கு செல்ல திடீரென திரும்பி யது. பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற சுரேஷ், இதில் நிலை தடுமாறி கார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.தகவல் அறிந்து விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார், சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.