சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் தொடக்க விழா
- ஏஐடியூசி மாவட்ட தலைவரும், சட்ட ஆலோசருமான முத்தையன்சங்க பெயர்பலகை திறந்துவைத்தார்
- சங்க உறுப்பினர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர் :
கீழ்பென்னத்தூரில் ஏஐடியூசி அனைத்து வாகனம் மற்றும் பொது சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
செயலாளர் வி. முருகன், பொருளாளர் அறிவழகன், துணைத்தலைவர் ஜெ ஏழுமலை, துணை செயலாளர்கள் ராஜேஷ், எம்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் எஸ். முருகன் வரவேற்றார். ஏஐடியூசி மாவட்ட தலைவரும், சட்ட ஆலோசருமான முத்தைய ன்சங்க பெயர்பலகை திறந்துவைத்தார். கவுரவ தலைவர் ராஜேந்திரன் சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், கவுரவ ஆலோசகர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன், சமூக ஆர்வலர் எல்ஐசி ம. சத்தியவேல், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் துரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சங்க உறுப்பினர்கள் முத்து, வெங்கடேசன், முருகன், சுபாஷ், கோபிநாத், வழங்கினர்.
முடிவில் சங்க உறுப்பினர் எஸ். முருகன் நன்றி கூறினார்.