உள்ளூர் செய்திகள்
போளூர் குளத்துமேடு முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா
- அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபாடு
- பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி கோவில் சுற்றி வந்து அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்
போளூர்:
போளூர் டவுன் குளத்து மேட்டில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் 65 -ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதனையோட்டி காலை அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கரகத்துடன் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் வீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி கோவில் சுற்றி வந்து அலகு குத்தியவாறு அந்தரத்தில் தொங்கிய மாலை அணிவித்து நேர்த்தி க்கடன் நிறைவே ற்றினர் மதியம் 1.00 மணி அளவில் கூழ்வா ர்த்தலும் அன்னதா னமும் நடைபெ ற்றது ஏற்பாடுகளை போளூர் நகர சலவை தொழிலா ளர்கள் சங்கத்தினர் செய்திரு ந்தனர்.