உள்ளூர் செய்திகள்

பக்தர் ஒருவர் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2023-03-08 15:14 IST   |   Update On 2023-03-08 15:14:00 IST
  • ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் திருவிழா
  • இரவு வாணவேடிக்கை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் முதல் நாளான்று கூழ் வார்த்தலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராத னையும் நடைபெற்றது.

இரண்டாம் நாளான்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பெண்கள் பொங்கல் வைத்தல், பம்பை சிலம்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சேவ ஆட்டம் ஆடி சாமி இறங்கிய பின் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த விழாவில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அன்று இரவு வாணவேடிக்கை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை பந்தாரப்பள்ளி ஊர் பொதுமக்கள் மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags:    

Similar News