உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி சாம்பியன்

Published On 2022-09-29 11:40 IST   |   Update On 2022-09-29 11:40:00 IST
  • அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
  • தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

காங்கயம்:

2022-2023-ம் ஆண்டிற்கான தாராபுரம் குறுமைய அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், காங்கயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குழு போட்டிகளில் 205 புள்ளிகள் பெற்று தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

தடகள போட்டியில் இந்த பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி 1,500, 800 மீட்டர் போட்டியில் முதலிடமும், 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-ம் இடமும் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ஹரிஸ் குண்டெறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், கோகுல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும், ஹெர்மன் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவன் விங்கேஷ்வரன் வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்                சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜீவகுமார், ராம்கி ஆகியோரையும், பள்ளி தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

Tags:    

Similar News