உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
நீலிகணபதிபாளையம் கருட பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
- திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நீலிகணபதிபாளையம் பகுதியில் கருட பெருமாள் கோவில் உள்ளது.
- கருடபெருமாள் சிறப்பு காய்கறிஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நீலிகணபதிபாளையம் பகுதியில் கருட பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான எம்.செட்டிபாளையம், சுல்தான்பேட்டை,நீலிகணபதிபாளையம்,மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.