உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

நகை, செல்போன்களுடன் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் விட்டு சென்ற வாலிபர் - போலீசார் கைப்பற்றி விசாரணை

Published On 2022-09-29 12:55 IST   |   Update On 2022-09-29 12:55:00 IST
  • சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 34 வயது பெண்ணை பார்க்க மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.

இதனை அடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த அந்த வாலிபர் திடீரென மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.இதையடுத்து பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி மோட்டார் சைக்கிளில் இருந்தது தங்க நகைகளா அல்லது கவரிங் நகையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற வாலிபர் யார்? எதற்காக மோட்டார் சைக்கிளில் விட்டுவிட்டு அவர் தப்பி சென்றார்? அந்த வாலிபர் பார்க்க வந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News