காங்கயம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 11 பேர் காயம்
- நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
- அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
முத்தூர் :
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று காலை 7 மணியளவில் காங்கயம், பழையகோட்டை சாலை, வாய்க்கால் மேடு பகுதி அருகே வந்த போது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் பதறியபடி கூச்சலிட்டு விழுந்தனர். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து சாலையில் காயங்களுடன் கிடந்த அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேனில் பயணம் செய்த 11 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்களின் சத்தத்தால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.