உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை இந்திரலிங்கம் கோவில் வளாகத்தில் அஷ்ட லிங்கங்கள் கும்பாபிஷேக விழா திருப்பணி பூஜை நடந்த போது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அஷ்ட லிங்கங்கள் கும்பாபிஷேக திருப்பணி தொடங்கியது

Published On 2022-09-12 09:38 GMT   |   Update On 2022-09-12 09:38 GMT
  • காலை குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா நடந்தது
  • கார்த்திகை தீபத்திற்குள் கும்பாபிஷேக விழா நடைபெறும்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

இந்திர லிங்கம், அக்னிலிங்கம் எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் மற்றும் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் ஆகிய 10 கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய நடைபெற உள்ளது.

இன்று காலை 9 மணியளவில் குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா இந்திர லிங்கம் கோவிலில் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது.

இதில் கோவில் இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலை வகித்தார். நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பணிகள் வரும் கார்த்திகை தீபத்திற்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News