உள்ளூர் செய்திகள் (District)

முகாமில் சாரணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு பள்ளியில் சாரணர்களுக்கான பயிற்சி முகாம்

Published On 2023-10-07 09:08 GMT   |   Update On 2023-10-07 09:08 GMT
  • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீருடைகள் 32 சாரணர்களுக்கு வழங்கப்பட்டது.
  • சாரண மாணவர்களுக்கு பயிற்றுனர் காசிநாதன் பயிற்சி அளித்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அடுத்த அபிசேகக்கட்டளை அரசு மேல்நிலை ப்பள்ளியில் சாரணர் மாணவர்களுக்கான ஒரு நாள் முகாம் தலைமை யாசிரியர் ஈஸ்வரி தலைமை யில் நடைபெற்றது.

முன்னதாக சாரணர் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.

தொடர்ந்து, சாரணர்கள் பள்ளி வளாகத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீருடைகள் 32 சாரணர்களுக்கு வழங்க ப்பட்டது.

முன்னதாக சாரண ஆசிரியர் சண்முகவேல் அனைவரையும் வரவேற்றார். சாரண மாணவர்களுக்கு பயிற்றுனர் காசிநாதன் பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் அம்பிகாபதி, பள்ளி ஆசிரியர்கள் குணசே கரன், சவுந்த ரராஜன், பாலசுப்பிரமணியன், அன்பழகன், தமிழ்செல்வி, சாந்தி, சுரேஷ், அபிராமி, விஜயா, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News