உள்ளூர் செய்திகள்

நாகை கலெக்டர் அலுவலகம், நாகூர் தர்கா மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

மூவர்ணத்தில் ஜொலிக்கும் நாகை கலெக்டர் அலுவலகம்- நாகூர் தர்கா

Published On 2023-08-14 09:45 GMT   |   Update On 2023-08-14 09:45 GMT
  • பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
  • பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

நாகப்பட்டினம்:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை நகராட்சி அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. முகப்பு பகுதியில் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News