உள்ளூர் செய்திகள்

ஜெலட்டின் குச்சிகளுடன் பிடிபட்ட பெரியண்ணன்.

ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி மீன் பிடித்த வாலிபரை கைது செய்த போலீசார்

Published On 2022-09-21 14:59 IST   |   Update On 2022-09-21 14:59:00 IST
  • மீன்களை கல் எறிந்து பிடித்தல், ஈட்டி மூலம் குத்தி எடுத்தல், புகையிலையை கரைத்து விட்டு பிடித்தல் இப்படி விதவிதமான முறைகளில் சிலர் மீன்களை பிடித்து வருகின்றனர்.
  • பெரியண்ணனை கைது செய்த போலீசார் ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து அவருக்கு ஜெலட்டின் குச்சிகள் கிடைத்தது எப்படி என்று துருவி,துருவி விசாரித்து வருகின்றனர்.

பாலக்கோடு ,

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் பருவமழை அதிகரிப்பால் பஞ்சப்பள்ளி சின்னாறு அனை நிரம்பி அதன் வழியாக ஆறு, ஏரி, குளங்களில் மீன்கள் அதிகளவில் நிரம்பி காணப்படுகின்றன,

மீன்களை கல் எறிந்து பிடித்தல், ஈட்டி மூலம் குத்தி எடுத்தல், புகையிலையை கரைத்து விட்டு பிடித்தல் இப்படி விதவிதமான முறைகளில் சிலர் மீன்களை பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் மாரண்டஅள்ளி அருகே சின்னாற்றில் பாறைகளுக்கு வெடி வைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து மீன்பிடிப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் வெங்க டேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை சுற்றி வளைத்த போலீசார் விசாரித்ததில் சாமியார் கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (வயது 29 ) என்பதும் அவர் வைத்திருந்த பையில் ஜெலட்டின் குச்சிகள் இருந்ததும் தெரியவந்தது.

விசாரணையில் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்ததாக பெரியண்ணன் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து அவருக்கு ஜெலட்டின் குச்சிகள் கிடைத்தது எப்படி என்று துருவி,துருவி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News