தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு, கிராம மக்களை சந்தித்தார் விஜய்

Published On 2025-01-20 12:43 IST   |   Update On 2025-01-20 12:43:00 IST
  • பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

காஞ்சிபுரம்:

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

இதையடுத்து பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் திருமண மண்டபத்தின் வெளியே கேரவனில் நின்றபடியே போராட்ட குழுவினரை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசி வருகிறார்.

Tags:    

Similar News