உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகள்.

ஊத்தங்கரை அதியமான் பள்ளியில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்

Published On 2023-08-30 10:32 GMT   |   Update On 2023-08-30 10:32 GMT
  • விழாவின் தொடக்க நிகழ்வாகத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.
  • இவ்விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவா சன் தலைமை வகித்தார்.

மத்தூர்,ஆக.30-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் , மல்லிகை நகரில் அமைந் துள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் சாதனை படைத்த தயான் சந்த் நினைவாக அவரின் பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்க நிகழ்வாகத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. இவ்விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார்.

அதைத் தொடர்ந்து அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி திருமால் முருகன் விழாவை தொடங்கி வைத்து தேசிய விளையாட்டு தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு 'உன் திறமையை வெளிக்காட்டு உலகம் உன்னை கண்டறியும்' என்று விளையாட்டின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார்.

மேலும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் வரவேற்புரை அளித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச் சியாக வளையதூரப்பணம், பிரமிடு மற்றும் மாணவ, மாணவிகளுக்குப் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

Tags:    

Similar News