ராஜபாளையத்தில் புறவழிசாலை-தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை
- ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
- அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வுக்கூட்டத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜபாளையம் நகரில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
அதில் ராஜபாளையம் நேரு சிலை முதல் சொக்கர் கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை தற்காலிகமாக (பேட்ச்ஒர்க்) சீரமைக்கப்பட்டது .
இந்த சாலையில் விரை வில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.ராஜபாளையம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக அமிழ் ஓட்டல் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.