உள்ளூர் செய்திகள்

வெப்பத்தில் இருந்து தப்பிக்க கடல் காற்று கைகொடுக்குமா?

Published On 2023-05-18 10:32 GMT   |   Update On 2023-05-18 10:32 GMT
  • வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.
  • கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

சென்னை:

சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் அளவு 106 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.

மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் கடல் காற்று உள்ளே வர தாமதமாவதால் மாலையிலும் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.

நேற்று பகலில் 106 டிகிரி வெயிலை கடந்த நிலையில் பிற்பகலில் ஆந்திர கடலோரத்தில் இருந்து தெற்கு நோக்கி வீசிய கடல் காற்று சென்னையின் வெப்பத்தை ஓரளவு தணித்தது. அடுத்த சில நாட்களுக்கும் வெயில் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

நேற்று பகல் 11 மணிக்கு மேல் கடல் காற்று வந்ததால் வெப்பம் குறைந்தது. அதே போல் இன்றும் வருமா? என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

கொளுத்தும் இந்த வெயிலுக்கு இடையேயும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News