சின்னசேலம் அருகே நகை திருடிய வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பேக்காடு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்செல்வி .இவரது வீட்டில் கடந்த 19.9.23 அன்று யாரும் இல்லாத நேரத்தில் 19 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று செம்பாக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் கீழ்குப்பம்சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன் தனிப்பிரிவு போலீஸ் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகம் படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கும் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சந்திரமோகன் (வயது 26 )என்பதும் இவர் நைனார்பாளையம் பேக்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.பின்னர் இவரிடமிருந்து 9 பவுன் நகை மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரமோகனை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.