செய்திகள்
மலேசியா சென்று வந்த வியாபாரியிடம் ரூ.87 ஆயிரம் பறிமுதல்
வண்ணாரப்பேட்டை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மலேசியா சென்று வந்த வியாபாரியிடம் ரூ.87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
ராயபுரம்:
கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் பாலு (65) மளிகை கடை உரிமையாளர். சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் சென்ற பாலு இன்று சென்னை திரும்பினார். அதிகாலையில் விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றார்.
அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். பாலு சென்ற காரை பறக்கும்படை அதிகாரி தமிழரசன் சோதனை செய்தார்.
இதில், வியாபாரி பாலுவிடம் ரூ.87 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அது மலேசியா சுற்றுப் பயணம் செய்து விட்டு வந்த பிறகு மீதம் உள்ள பணம் என்று பாலு கூறினார். என்றாலும், தகுந்த ஆவணம் இல்லாமல் பணம் வைத்திருந்ததாக கூறி, 87 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019