ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் கொலை: 5 வீரர்கள் காயம்
- கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை.
- ஐந்து பயங்கரவாதிகளில் இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சி மேற்கொள்கின்றனர்.
இதை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஐந்து பயங்கரவாதிகள் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஐந்து வீரர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த வீரர்களுக்கு கதுவா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.