செய்திகள்

இதய அறுவை சிகிச்சை பெறும் பாகிஸ்தான் பிரதமர் விரைவில் குணம்பெற மோடி வாழ்த்து

Published On 2016-05-28 17:55 GMT   |   Update On 2016-05-28 17:55 GMT
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு இன்னும் இரண்டு நாட்களில் இதய அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அவரது உடல் நலம் விரைவில் குணமடைய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு இன்னும் இரண்டு நாட்களில் இதய அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அவரது உடல் நலம் விரைவில் குணமடைய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதயக் கோளாறு காரணமாக ஏற்கனவே சில ஆண்டுகளாக நவாஸ் ஷெரிப் லண்டனில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென டாக்டர்கள் அறிவுரையின்படி அவர் லண்டன் சென்றுள்ளார். அவருக்கு வரும் 31-ம் தேதி இதய அறுவை ஆபரேஷன் நடக்கவுள்ளது

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் “இதய அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் நவாஸ் ஷெரிப் , விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்பிட அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Similar News