செய்திகள்
மோடி கலந்துரையாடல்

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

Published On 2021-06-03 13:49 GMT   |   Update On 2021-06-03 13:49 GMT
மாணவர்கள் பாதுகாப்புதான் முக்கியம் எனக்கூறிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு ரத்து என எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார்.
கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நாடு தழுவிய அளவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த சூழ்நிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டுமா? என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி அறிவித்தார்.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்ததும், பல மாநிலங்கள் அந்தந்த மாநில 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது.

இந்த நிலையில் இன்று மத்திய கல்வித்துறை சார்பில் பிரதமர் மோடி சி.பி.எஸ்.இ. மாணவ- மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்தது.

அதன்படி இன்று மாலை மாணவ- மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது ‘‘12-ம் வகுப்பு மாணவர்கள் எப்போதும் எதிர்காலம் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பார்கள். ஜூன் 1-ந்தேதி வரைக்கும், நீங்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்திருப்பீர்கள். மாணவர்கள் 75-வது சுதத்திர தினத்தை முன்னிட்டு ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகள் எழுத வேண்டும்’’ என்றார்.



அப்போது மாணவர்கள், ‘‘சார், நீங்கள் தேர்வை திருவிழா போன்று கொண்டாட வேண்டும் என்ற கூறியிருக்கிறீர்கள். ஆகவே, தேர்வு குறித்து எங்களுடைய மனதில் எந்த பயமும் இல்லை’’ என்றனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் ‘‘தேர்வு ரத்து சரியான முடிவு’’ என்றான்.

Similar News