2024 ரீவைண்ட்: நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு
- தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
- வயநாடு நிலச்சரிவு சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்துசெய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தை ரத்துசெய்து மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.