இந்தியா

பாஜக-வுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் மக்களுக்கு சொல்ல வேண்டும்: ஆம் ஆத்மி

Published On 2025-01-28 21:56 IST   |   Update On 2025-01-28 21:56:00 IST
  • பிரதமர் மோடி போலியான மதுபான கொள்கை ஊழல் வழக்கை உருவாக்கி, எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களை ஜெயிலில் அடைத்தார்.
  • காங்கிரஸ் கட்சி குடும்பத்தினருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஒருவர் கூட ஏன் கைது செய்யப்படவில்லை.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது பாஜக மற்றும் ஆத்மி கட்சி தலைவர்கள் மாறிமாறி குற்றம்சாட்டி வந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியை கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியது. இன்று ராகுல் காந்தி ஷீஷ் மஹால் விவகாரம், டெல்லி மதுபானக்கொள்கை தொடர்பான பண மோசடி ஊழல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியை விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் பாஜக உடனான ஒப்பந்தம் பற்றி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா கக்கார் கூறியதாவது:-

பிரதமர் மோடி போலியான மதுபான கொள்கை ஊழல் வழக்கை உருவாக்கி, எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களை ஜெயிலில் அடைத்தார். அந்த வழக்கில் ஒரு ஆதாரம் கூட இல்லை.

மற்றொரு பக்கம், காங்கிரஸ் கட்சி குடும்பத்தினருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஒருவர் கூட ஏன் கைது செய்யப்படவில்லை. பாஜக-விடம் இருந்து ராபர்ட் வதேரா குற்றமற்றவர் (Clean Chit) என்பதை பெற்றது எப்படி?. கோழை யார்? துணிச்சலானவர் யார்? என்பது மக்களுக்குத் தெரியும்.

பாஜக-வுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா கக்கார் தெரிவித்தார்.

Similar News