நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்திப்பு
- அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார்.
- அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்ற அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக இருதரப்பினரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி. அதற்கு வசதியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
கடந்த சில நாட்களாக பா.ஜ.க-அ.தி.மு.க. தலைவர்கள் இடையேயான சந்திப்பு தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.