இந்தியா

VIDEO: பழுதான மின்சார காரை இழுத்து சென்ற காளைகள்

Published On 2025-01-02 09:16 GMT   |   Update On 2025-01-02 09:16 GMT
  • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மின்சார வாகனத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.
  • ஒரு வருடத்திற்குள் 16 முறை பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன்.

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தீத்வானா மாவட்டத்தில் உள்ள குச்சமன் நகர் பகுதியை சேர்ந்த அனில் சிங் என்பவரது மின்சார கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதானது. இதனால் அவரால் அங்கிருந்து காரை ஓட்டி செல்ல முடியவில்லை. அதோடு நடுரோட்டில் கார் பழுதாகி நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் நிலவியது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த காளை வண்டியில் இருந்து பழுதான காருக்கு கயிறு கட்டி இழுத்து சென்றுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மின்சார வாகனத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கார் உரிமையாளரான அனில் சிங் மெட்டியா கூறுகையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மின்சார காரை வாங்கினேன். ஆனால் ஒரு வருடத்திற்குள் 16 முறை பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன். சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த சரியான பதிலையும் வழங்கவில்லை என விரக்தியுடன் கூறினார்.



Tags:    

Similar News