இந்தியா

VIDEO: குடிபோதையில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த இளைஞர்

Published On 2025-01-02 13:30 GMT   |   Update On 2025-01-02 13:30 GMT
  • குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
  • இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார். இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது போலீசாரிடம் பிரச்சனை செய்த இளைஞர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News