இந்தியா

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன்

Published On 2025-02-01 11:05 IST   |   Update On 2025-02-01 11:05:00 IST
  • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
  • பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இதைத்தொடா்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா்.

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பங்கஜ் சவுத்ரி ஆகியோர் சந்தித்தனர்.

 

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு தலைவருடனான சந்திப்புக்குப்பின் பாராளுமன்றம் சென்ற நிதியமைச்சர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பாராளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News