VIDEO: மாணவிகளுடன் நடனமாடிய வார்டன்...
- வீடியோவை ஒரு மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது வைரலாகியது.
- வார்டனின் இந்த நடனத்தை பார்த்த பலரும் இதுபோன்ற வார்டன் தங்களுக்கு கிடைக்கவில்லையே என பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரிக்குச் சொந்தமான மாணவியர் விடுதி அருகிலேயே அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அந்த கல்லூரியில் படித்து வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு அங்குள்ள மாணவிகள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிக சத்தம் கேட்டதால் இதனை தட்டிக் கேட்க அந்த விடுதி வார்டன் அங்கு சென்றார். அவரை பார்த்ததும் மாணவிகள் ஒரு நிமிடத்தில் உறைந்து போயினர். ஆனால் அதில் ஒரு மாணவி அவரது கையை பிடித்து நடனமாடும்படி வற்புறுத்தினார்.
முதலில் திட்டுவது போல சென்றாலும் அந்த மாணவியின் வேண்டுகோளுக்கிணங்க வார்டனும் 'வக்த் பாதல் தியா, ஜஸ்பத் பாதல் தியே' என்ற பிரபல இந்தி பாடலுக்கு அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இந்த வீடியோவை ஒரு மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது வைரலாகியது.
வார்டனின் இந்த நடனத்தை பார்த்த பலரும் இதுபோன்ற வார்டன் தங்களுக்கு கிடைக்கவில்லையே என பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.