இந்தியா

கைலாஷ் மானசரோவர், நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க இந்தியா- சீனா ஒப்புதல்

Published On 2025-01-27 20:58 IST   |   Update On 2025-01-27 20:58:00 IST
  • 2020-ம் ஆண்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
  • ராஜாங்க ரீதியிலான உறவு (diplomatic relations) தொடங்கப்பட்டு 75 வருடம் நிறைவடைவதை தொடர்ந்து ஒப்புதல்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்குவதற்கும் இந்தியா- சீனா ஒப்புக் கொண்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியிலான உறவு (diplomatic relations) தொடங்கப்பட்டு 75 வருடம் நிறைவடையும் 2025-ம் ஆண்டில் இரு நாடுகளும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

2020-ம் ஆண்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீனா வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நேரடி விமான சேவையை தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News