இந்தியா

கேரள முதல்வரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2022-09-02 20:27 IST   |   Update On 2022-09-02 20:27:00 IST
  • தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
  • இதில் பங்கேற்கச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்தார்.

திருவனந்தபுரம்:

தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கோவளத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவருக்கு திராவிட மாடல் (The Dravidian Model) என்ற புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வழங்கி பொன்னாடை அணிவித்தார்.

திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்து வைக்கிறார். கூட்டம் முடிந்ததும் நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Tags:    

Similar News