இந்தியா

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

Published On 2024-06-07 18:59 IST   |   Update On 2024-06-07 18:59:00 IST
  • டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மோடி சந்தித்தார்.
  • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை அவர் அளித்தார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மோடி சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து,3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு மோடி ஆட்சி அமைப்பதற்கான ஆணையை வழங்கினார்.

இந்நிலையில், ராஷ்டிரபதி பவனில் மோடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான அரசை அமைக்கும். இந்தக் கூட்டணிக்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி.

கடந்த 2 முறை நடந்த ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் தேசம் முன்னேற்றப் பாதையில் சென்றுள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளேன். பிரதமராக நியமிக்கும் நியமன கடிதத்தை ஜனாதிபதி என்னிடம் வழங்கியுள்ளார். அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை வழங்கும்படி ஜனாதிபதி கேட்டுள்ளார்.

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உலக நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News