இந்தியா

கேரளாவின் 23-வது கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார்

Published On 2025-01-02 06:48 GMT   |   Update On 2025-01-02 06:48 GMT
  • கேரள மாநில கவர்னர் ஆரீப்முகமதுகான் பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.
  • கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநில கவர்னராக இருந்த ஆரீப்முகமதுகான், பீகார் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். கேரள கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

இதனை தொடர்ந்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். கேரளத்தின் 23-வது கவர்னராக பதவியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News