இந்தியா

நவம்பரில் சில்லரை பணவீக்கம் 5.48 சதவீதமாக குறைவு

Published On 2024-12-12 11:40 GMT   |   Update On 2024-12-12 11:40 GMT
  • ஜூலை- ஆகஸ்ட் காலத்தில் சராசரியாக 3.6 சதவீதத்தில் இருந்தது.
  • செப்டம்பரில் 5.5 சதவீதமாகவும், அக்டோபர் 2024-ல் 6.2 சதவீதமாகவும் அதிகரித்தது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 5.48 ஆக குறைந்துள்ளதாக என அரசு தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 6.21 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது கொஞ்சம் சரிந்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistics Office) வெளியிட்டுள்ள நுகர்வோர் விலை குறியீட்டு எண் (Consumer Price Index) தரவுகளின்படி, உணவுப் பொருட்களின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 9.04 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அக்டோபரில் 10.87 சதவீதமாகவும், 2023 நவம்பரில் 8.70 சதவீதமாகவும் இருந்தது.

நவம்பர் 2024-ல் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பொருட்கள், சர்க்கரை மற்றும் தின்பண்டங்கள், பழங்கள், முட்டை, பால் மற்றும் பொருட்கள், மசாலாப் பொருட்கள் போன்றவற்றில் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது.

நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் ஜூலை- ஆகஸ்ட் காலத்தில் சராசரியாக 3.6 சதவீதத்தில் இருந்து செப்டம்பரில் 5.5 சதவீதமாகவும், அக்டோபர் 2024-ல் 6.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News