இந்தியா

தந்தையை 15 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற மகன்

Published On 2025-02-23 16:35 IST   |   Update On 2025-02-23 16:35:00 IST
  • தந்தையை கொலை செய்த சாய்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத், லாலாபேட்டையை சேர்ந்தவர் மொகிலி (வயது45). இவரது மகன் சாய்குமார் (25). தந்தையும் மகனும் ஐதராபாத் அடுத்த குஷைகுடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

மொகிலி தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். அவரது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

மது போதையில் வீட்டுக்கு வந்த மொகிலி மனைவி மற்றும் மகனை தாக்கினார். இதனால் தந்தை மீது ஆத்திரம் அடைந்த சாய்குமார் தந்தை உயிருடன் இருந்தால் நாம் நிம்மதியாக வாழ முடியாது. என நினைத்தார். தந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.

நேற்று காலை மொகிலி லாலா பேட்டையில் இருந்து பஸ்சில் ஏறி குஷைகுடா பஸ் நிலையத்திற்கு வந்தார். அவரது மகன் சாய்குமார் பைக்கில் தந்தையை பின் தொடர்ந்தார்.

மொகிலி பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அவரது பின்னால் வந்த சாய்குமார் தான் தயாராக எடுத்து வந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார்.

மொகிலி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து வலியால் அலறி கூச்சலிட்டார். கெஞ்சியும் அவரை விடாமல் கத்தியால் குத்தினார்.

சாய்குமார் அவரது தந்தையை 15 இடங்களில் கத்தியால் குத்தினார். இதில் மொகிலி துடிதுடித்து இறந்தார். பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தந்தையை கொலை செய்த சாய்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மொகிலி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் பலரது முன்னிலையில் தந்தையை மகன் குத்தி கொலை செய்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News