இந்தியா
null

பாஸ்போர்ட் வாங்கி தருவதாக சீன வாலிபரிடம் ரூ.12 லட்சம் பறித்த சென்னை வாலிபர்கள்

Published On 2022-07-08 05:19 GMT   |   Update On 2022-07-08 05:19 GMT
  • சீனாவை சேர்ந்தவர் டூயிங். இவர் வியாபார நிமித்தமாக சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது.
  • பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட் போலியானது என தெரிவித்தனர்.

திருப்பதி:

சீனாவை சேர்ந்தவர் டூயிங். இவர் வியாபார நிமித்தமாக சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீண்டும் சீனாவிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் சென்னை பாரிசை சேர்ந்த சல்மான் (வயது 32), கண்ணன் (34) ஆகியோர் டூயிங் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு நாடு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருவதையும் அவர் தற்போது ரேணிகுண்டாவில் இருப்பதையும் அறிந்தனர். இதையடுத்து அவர்கள் ரேணிகுண்டாவிற்கு வந்து டூயிங்கை சந்தித்து தங்களுக்கு தெரிந்த பாஸ்போர்ட் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று தருவதாக தெரிவித்தனர்.

இதை உண்மை என அறிந்த டூயிங் அவர்கள் கேட்ட ரூ.12 லட்சத்தை கொடுத்தார். இதையடுத்து சல்மான், கண்ணன் ஆகியோர் டூயிங்கிடம் பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு சென்றனர். தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்காக டூயிங் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட் போலியானது என தெரிவித்தனர். இதையடுத்து டூயிங், சல்மான், மற்றும் கண்ணன் ஆகியோரது செல்போனை தொடர்பு கொண்டார்.

அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டியிடம் டூயிங் புகார் செய்தார்.

பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் பேரில் திருப்பதி டி.எஸ்.பி ராமச்சந்திரா தலைமையிலான போலீசார் சென்னை பாரிசில் பதுங்கி இருந்த சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கண்ணனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News