காங்கிரஸ்-பா.ஜ.க. என்ன வித்தியாசம்? ராகுல் காந்தி அளித்த 'நறுக்' பதில்
- காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
- பணக்காரர்களுக்கு ஆதரவான பொருளாதார திட்டங்களை நம்புவார்கள்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஐ.ஐ.டி. மெட்ராஸ் மாணவர்களிடையே நேற்று (ஜனவரி 4) உரையாற்றினார். அப்போது, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அந்த வகையில், மாணவர் ஒருவர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, பா.ஜ.க.-வினர் பணக்காரர்களுக்கு ஆதரவான பொருளாதார திட்டங்களை நம்புவார்கள் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "பொருளாதார அடிப்படையில் 'டிரிபிள்-டவுன்' (வெகுஜன பொருளாதாரத்தை விட பணக்கார அல்லது மிகப்பெரிய கார்ப்பரேஷன்களுக்கு ஆதரவான நிலைப்பாடு) என்பதை அவர்கள் நம்புகிறார்கள். சமூகப் பார்வையில், நாங்கள் சமுதாயம் எவ்வளவு இணக்கமானதாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான மக்கள் போராடுவார்கள், அது நாட்டிற்கும் நல்லது என்று நாங்கள் உணர்கிறோம்."
"சர்வதேச உறவுகள் அடிப்படையில், மற்ற நாடுகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவை ஒத்ததாகவே இருக்கும்," என்று தெரிவித்தார்.