இந்தியா

'தன் அப்பாவையே மாற்றியவர்' என்று பேசிய பாஜக வேட்பாளர்.. மனமுடைந்து அழுத அதிஷி - வீடியோ

Published On 2025-01-06 17:57 IST   |   Update On 2025-01-06 17:59:00 IST
  • மார்லினாவாக இருந்த அதிஷி இப்போது சிங். தன் தந்தையை கூட மாற்றிவிட்டார் என்று கூறினார்.
  • பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள்

டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக- ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, தனக்கு வாக்களித்தால், பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போதுடெல்லி முதல்வர் அதிஷி தனது தந்தையையே மாற்றியவர் என்று ரமேஷ் பிதுரி பேசியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிதுரி, மார்லினாவாக இருந்த அதிஷி இப்போது சிங். தன் தந்தையை கூட மாற்றிவிட்டார் என்று கூறினார்.

பாஜக தலைவர்கள் வெட்கமின்மையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக கெஜ்ரிவால் இந்த கருத்துக்கு கண்டம் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் அதிஷி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மனமுடைந்து அழுதுள்ளார். தந்தையின் வயது மற்றும் உடல்நிலையை பற்றி குறிப்பிட்ட அதிஷி , பாஜகவின் "அழுக்கு அரசியலை" கடுமையாக சாடினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிஷி, ரமேஷ் பிதுரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன், என் தந்தை தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருந்தார், ஏழை மற்றும் கீழ் நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் கற்பித்துள்ளார், இப்போது அவருக்கு 80 வயதாகிறது, இப்போது அவர் உண்மையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். உதவியின்றி நடக்க கூட முடியாது என்று கூறி மனமுடைந்து கண்கலங்கினார்.

மேலும் தனது கோபத்தை வெளிப்படுத்திய அவர், தேர்தலுக்காக நீங்கள் (ரமேஷ் பிதுரி) இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்வீர்களா? முதியவரைத் திட்டும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். இந்த நாட்டு அரசியல் தலைகீழாக மாறும் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.

அதிஷியின் பெயர்

அதிஷியின் முழு பெயர் அதிஷி மார்லெனா சிங் [Atishi Marlena Singh] என்பதாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். 2018 இல் தனது பெயரில் உள்ள மார்லேனா வை அதஷி நீக்கியுள்ளார்.

தனது வேலையைப் பார்த்து மக்கள் தன்னை தீர்மானிக்க வேண்டும் என்றும் தனது பின்புலத்தை [கமியூனிச] வைத்து தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக பொது உபயோகத்தில் இருந்து மார்லேனவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News