இந்தியா
செயல்படாமல் உள்ள தகவல் ஆணையத்தால் என்ன பயன்?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
- மத்திய தகவல் ஆணையத்தில் 10 ஆணையர்கள் இருக்க வேண்டிய நிலையில் இருவர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.
- காலியாக உள்ள தகவல் ஆணையர் பதவிகள் எப்போது நிரப்பப்படும்?.
மத்திய தகவல் ஆணையர், பிற மாநில தகவல் ஆணையர் பதவியிடங்கள் பல மாதமாக நிரப்பப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் முறையீடப்பட்டிருந்தது.
இது முறையீடு தொடர்பான இன்றைய விசாணையின்போது, "மத்திய தகவல் ஆணையத்தில் 10 ஆணையர்கள் இருக்க வேண்டிய நிலையில் இருவர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். செயல்படாமல் உள்ள தகவல் ஆணையத்தால் என்ன பயன்?. காலியாக உள்ள தகவல் ஆணையர் பதவிகள் எப்போது நிரப்பப்படும்?. எப்போது ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.