ஷீஷ் மஹாலை பார்க்க சென்றது ஊழலில் இருந்து திசை திருப்புவதற்கான ஆம் ஆத்மியின் டிராமா: பாஜக
- ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?.
- ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, முதல்வர் இல்லம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. முதல்வர் வீட்டில் (ஷீஷ் மஹால்) தங்க முலாம் பூசப்பட்ட கழிவறை உள்ளது. டெல்லி மக்கள் பணத்தில் ஷீஷ் மஹால் கட்டப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியது.
இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடுவதற்காக சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஷீஷ் மஹாலை பார்வையிடச் சென்றது ஊழலில் இருந்து திசை திருப்பும் ஆம் ஆத்மியின் செயல் என டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீரேந்திர சச்தேவா கூறுகையில் "ஷீஷ் மஹாலுக்கு சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஏன் முன்னதாகவே செல்லவில்லை?. ஆம் ஆத்மி தலைவர்கள் டிராமா செய்து கொண்டிருக்கிறார்கள். ஷீஷ் ஊழலில் இருந்து திசை திருப்புவதற்கான முயற்சியை ஆம் ஆத்மி செய்து வருகிறது.
ஷீஷ் மஹாலை முன்னதாகவே பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு முன்னதாகவே தோன்றவில்லை. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது ஏன் செல்ல முயற்சிக்கிறார்கள். முதல்வர் அதிஷிக்கு ஏபி 17 மதுரா சாலை பங்களா ஒதுக்கப்படும்போது, அவர் ஏன் இன்னொரு பங்களாவை கோருகிறார்?.
ஷீஷ் மஹாலுக்கு குற்றச்சாட்டில் இருந்து திசைதிருப்பும் வகையில் பிரதமர் வீடு குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்புவது அற்ப அரசியல்.
இவ்வாறு வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.