இந்தியா

'பாப்' பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய பெண்கள்- வீடியோ வைரல்

Published On 2025-01-09 09:16 IST   |   Update On 2025-01-09 09:16:00 IST
  • பாடலுக்கு வலைத்தள பிரபலங்கள் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
  • வீடியோ இணையத்தில் வெளியாகி 50 லட்சம் பார்வைகளையும் 1 லட்சம் ‘லைக்’குகளை குவித்து வைரலாகி வருகிறது.

பிரபல அமெரிக்கா பாப் இசை கலைஞர் புருனோ மார்ஸ். பிரபல கொரியா பாப் இசைக்குழுவான 'பிளாக் பிங்க்'கை சேர்ந்தவர் ரோஸ். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து 'அப்பாட்சு' என்ற பாடலை பாடியநிலையில் அது பட்டி தொட்டியெங்கும் 'ஹிட்' அடித்து வைரலாகி வருகிறது.

இந்த பாடலுக்கு வலைத்தள பிரபலங்கள் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்திய பரதநாட்டிய கலைஞர் ஒருவர் தனது குழுவுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இளம்பெண்கள் 6 பேர் கொண்ட அந்த குழுவில் பாரம்பரிய நாட்டிய உடையை அணிந்தவாறு இந்த பாடலை ஒலிக்க விட்டப்படி சமகால நடன அசைவுகளுடன் இணைத்து பரதம் ஆடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி 50 லட்சம் பார்வைகளையும் 1 லட்சம் 'லைக்'குகளை குவித்து வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News