இந்தியா

வியட்நாம் டிராஃபிக் ரூல்ஸ்.. இந்தியாவில் இருந்தால் ஐ.டி. வேலையை உதறிவிடுவோம் எனக் கூறும் நெட்டிசன்கள்

Published On 2025-01-09 20:04 IST   |   Update On 2025-01-09 20:56:00 IST
  • வியட்நாம் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 17 ஆயிரம் ரூபாய் ஆகும்.
  • 70 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் கடுமையாக விதி அமல்.

வியட்நாமில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. சாலையில் சிகப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் நிற்காமல் சென்றாலோ, செல்போன் பேசிக்கொண்டு சென்றாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் சிகப்பு விளக்கு விழுந்தபின், கோட்டை தாண்டி சென்றால் இந்திய பண மதிப்பிற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முந்தைய அபராதத்தை விட இது 6 மடங்கு அதிகமாகும். காரில் செல்லும்போது இதேபோன்று விதியை மீறினால் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் அபராதம் இரண்டு மடங்காகும்.

இதில் என்ன விஷேசம் என்றால் விதிமுறையை மீறும் வாகனங்கள் தொடர்பாக தகவல் கொடுத்தால், தகவல் கொடுக்கும் நபர்களுக்கு 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அத்துடன் அவர்கள் விவரம் ரசகியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இந்த ரூல்ஸ் இந்தியாவில் இருந்தால் ஐ.டி. வேலையை உதறவிடுவோம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News