இந்தியா
Video: ஓடும் ரெயிலில் பயணியை கொடூரமாக தாக்கிய ரெயில்வே ஊழியர்கள்
- பயணியை அடித்ததுடன் அவரை மோசமான வார்த்தைகளில் ரெயில்வே ஊழியர் திட்டுகிறார்.
- இந்த சம்பவம் ஆம்ரபாலி ரெயிலில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
ஓடும் ரெயிலில் பயணி ஒருவரை ரெயில்வே அதிகாரிகள் பெல்ட்டை கொண்டு தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், "ஓடும் ரெயிலில் ரெயில்வே ஊழியர் ஒருவர் பயணி ஒருவரை படுக்க வைத்து பெல்ட்டை கொண்டு பலமுறை அடிக்கிறார். அப்போது அந்த பயணி தப்பிக்காமல் இருக்கும் வகையில் ரெயில் டிக்கெட் பரிசோதகர் அவர் மீது அமர்ந்துள்ளார்.
மேலும், பயணியை அடித்ததுடன் அவரை மோசமான வார்த்தைகளில் ரெயில்வே ஊழியர் திட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அமிர்தசரஸ் மற்றும் கதிஹார் ரெயில் நிலையங்களுக்கு இடையில் ஆம்ரபாலி ரெயிலில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.