ராகுல் காந்தி போட்ட 'Cold Coffee' - வீடியோ வைரல்
- கடைக்கு வருபவர்களுடன் ராகுல் உரையாடுவதையும் வீடியோவில் காணமுடிகிறது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக, லாரி ஓட்டுநர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரெயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட தொழில்சார்ந்தவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது பிரபலமான கெவென்டர்ஸ் கடைக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களுடன் கலந்துரையாடி 'Cold Coffee' தயாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடையின் இணை நிறுவனர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி அவர்களின் திட்டங்கள் மற்றும் சவால்கள் குறித்தும் கேட்டு அறிகிறார்.
மேலும் ஊழியர்கள் 'Cold Coffee'யை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று ராகுலிடம் கேட்டபோது, அதற்கு அவர், "இல்லை, நான் அதைச் செய்வேன்" என்று பதிலளித்தார். பின்னர் அவர் பால், ஐஸ்கிரீமைச் சேர்த்து மிக்சியை இயக்கி, கெவென்டர்ஸின் சிக்னேச்சர் பாட்டிலில் பானத்தை ஊற்றுவதைக் காணலாம்.
கடைக்கு வருபவர்களுடன் ராகுல் உரையாடுவதையும் வீடியோவில் காணமுடிகிறது. ஒரு வயதான பெண்மணி அதே கட்டிடத்தில் தங்கியிருப்பதாகக் கூறி அவரை வீட்டிற்கு அழைக்கிறார். "நான் இரண்டு நிமிடங்களில் வருகிறேன்" என்று ராகுல் காந்தி அந்தபெண்மணிக்கு உறுதியளிக்கிறார்.