இந்தியா

இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டும் என்றால், முறித்துக் கொள்வது சிறந்தது: உமர் அப்துல்லா

Published On 2025-01-09 14:57 IST   |   Update On 2025-01-09 14:57:00 IST
  • டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுவிக்க வேண்டும்.
  • இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்கு மட்மே என்றால், முறித்துக் கொள்ள வேண்டும்.

2024 பராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.-வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. டெல்லி, பஞ்சாப் மாநில அரசியலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் நேருக்குநேர் எதிரியாக இருந்தாலும் பா.ஜ.க.-வை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்தன. அதேபோல் கருத்து வேறுபாடுள்ள கட்சிகளும் இந்தியா கூட்டணியில் ஒன்றிணைந்தன. கடைசி நேரத்தில் மம்தா பானர்ஜி மட்டும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

மாநில சட்டமன்ற தேர்தல் என வரும்போது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக பிரிந்து விடுகின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்காக மட்டுமே என்றால் கூட்டணியை முறித்துக் கொள்ளவது நல்லது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறுகையில் "டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுவிக்க வேண்டும். இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்கு மட்மே என்றால், முறித்துக் கொள்ள வேண்டும். அது சிறந்ததாக இருக்கும். அதன்பின் தனியாக செயல்பட வேண்டும்.

கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்கும் பொருந்தும் என்றால், நாம் ஒன்றாக இணைந்து, கூட்டாக பணியாற்ற வேண்டும்" என்றார்.

வாக்கு எந்திரம் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பிய நிலையில், வெற்றி பெறும்போது குறை கூறுவது இல்லை. தோல்வியடையும்போது மட்டும் குறை கூறினால் சரியாக இருக்காது என உமர் அப்துல்லா ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News