இந்தியா

ஒரே பாலின திருமணம் தீர்ப்பில் தவறு இல்லை: மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Published On 2025-01-09 22:01 IST   |   Update On 2025-01-09 22:01:00 IST
  • 2023-ம் ஆண்டு ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
  • இந்த தீர்ப்பு எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரே பாலின திருமணம் தீர்ப்பில் தவறு இல்லை. ஓபன்-கோர்ட் விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் வெளிப்படையான தவறு ஏதும் இல்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தலையீடும் தேவையில்லை எனக் கூறி, 2023-ம் ஆண்டு ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்து தாக்கல் செய்யப்பட் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tags:    

Similar News